search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தமான் தீவு"

    அந்தமான் தீவு பகுதிகளில் இன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. #Earthquake #AndamanIslands
    போர்ட்பிளேர்:

    அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.



    மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஏப்ரல் 1-ம் தேதி 4.7 ரிக்டர் முதல் 5.2 ரிக்டர் வரையில் 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகளை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். #Andaman #Island #Tourist
    போர்ட்பிளேர்:

    அந்தமானில் உள்ள தீவுக்கூட்டங்கள் சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. இங்குள்ள தீவுகளை பார்வையிடுவதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த 15-ந்தேதி அந்தமானின் ஹேவ்லாக் மற்றும் நைல் தீவுகளுக்கு சுமார் 1100 சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர்.

    அப்போது மோசமான வானிலையால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் அவர்களால் திரும்ப முடியவில்லை. தீவிலேயே சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களை மீட்பதற்காக அந்தமான் நிர்வாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களுடன் இணைந்து கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களும் மீட்பு பணிகளை மேற்கொண்டன.

    இதன் மூலம், அங்கு சிக்கியிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கடந்த 2 நாட்களாக அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அவர்கள் திரும்பி சென்றனர்.  #Andaman #Island #Tourist 
    அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி அந்தமான் நிகோபார் தீவில் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #AmericanTourist #NorthSentinelIslan
    அந்தமான்:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்பவர் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடந்த சனிக்கிழமையன்று உள்ளூர் மீனவர் ஒருவருடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அங்குள்ள பழங்குடியின மக்கள் கொன்றிருக்கலாம் என தெரிகிறது.



    வடக்கு சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட சென்டினலிஸ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வெளியுலகம் அறியாதவர்கள் என்பதால், அன்னியர்கள் யாராவது வந்தால் அவர்களை தாக்குகிறார்கள். குறிப்பாக வில் அம்புகள் மூலம் நெருப்பை பற்ற வைத்து வெளிநபர்களை தாக்கி கொன்றுவிடுவார்கள். அதனால் அங்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் ஜான் ஆலன் அங்கு சென்றபோது தாக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் ஆலன் அந்த தீவுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்த மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #AmericanTourist #NorthSentinelIsland
    ×